Here we provide Free TNUSRB PC Coaching Study Material for your Preparation
TNUSRB SI Exam Syllabus
TNUSRB PC Coaching Study Material Topic: உணவுமுறைகள்
45.உடலுக்கு ஊட்டத்தை தரும் பொருட்களை உணவு என்கிறோம்.
46.ஆற்றலைக்கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் கார்போஹட்ரேட்கள், கொழுப்புக்கள் ஆகும்.
47.உடலுக்குத் தேவையான உணவுச்சத்துக்களை ஊட்டச்சத்துக்கள் என்கிறோம்.
48.வளர்ச்சியை அளிக்கும் ஊட்டச்சத்து – புரதங்கள்.
49.உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்தும் ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள், தாது உப்புக்கள்
50.உணவைக் கடத்துவதையும், உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவதையும், நீர் ஊட்டச்சத்து செய்கிறது.
51.வெள்ளரிக்காயில் உள்ள நீரின் அளவு – 95%.
52.உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு – 75%
53.காளானில் உள்ள நீரின் அளவு – 92%
54.முட்டையில் உள்ள நீரின் அளவு – 73%
55.பாலில் உள்ள நீரின் அளவு – 87%
56.ஒரு துண்டு ரொட்டியில் உள்ள நீரின் அளவு – 25%
57.அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகித உணவு ஆகும்.
58.மக்காச்சோளம், பார்லி, திணை போன்ற தானியங்களில் அதிகமாக உள்ள சத்துக்கள் – வைட்டமின் B1, B2, கார்போஹைட்ரேட், புரதம், இரும்புச் சத்து, நார்ச்சத்து, போலிக் அமிலம்.
59.பருப்பு வகைகளில் அதிகம் உள்ள ஊட்டச்சத்துகள் – புரதம், இருமம்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி1, பி2, போலிக் அமிலம்.
60.பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள் – புரதம், கொழுப்பு, கால்சியம், வைட்டமின்- பி2.
61.பப்பாளி, ஆரஞ்சு, தர்பூசணி, சாத்துக்குடி, திராட்சை ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் – இரும்புச் சத்து, கால்சியம்.
62.மாம்பழம், கொய்யா, தக்காளி ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் – கரோட்டினாய்டு, வைட்டமின்- சி, இரும்புச் சத்து, கால்சியம்.
63.நெல்லிக்காய், கீரைகள், முள்ளங்கி இலை, கொத்தமல்லி இழை ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் – இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, கரோட்டினாய்டு, போலிக் அமிலம்.
64.சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் – கார்போஹைட்ரேட் மற்றும் இரும்புச் சத்து.
65.வெள்ளைச் சர்க்கரையை விட வெல்லம் உடலுக்கு பன்மடங்கு நன்மை தருகிறது.
66.காய்கறிகள், பழங்கள் நறுக்கிய பின் கழுவினால் அவற்றிலுள்ள வைட்டமின்கள் அழிந்துவிடும்.
67.நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து குறைவதால் குறைபாட்டு நோய் எற்படுகிறது.
68.புரத குறைபாட்டால் 1 முதல் 5 வயதுக் குழந்தைகளுக்கு எற்படும் மெலிந்த தோற்ற நோய் – குவாஷியோக்கர்.
69.புரதக்குறைவால் ஏற்படும் பெரியதலை, எடைக்குறைவு, குறைந்த உடல் மற்றும் மூளை வளர்ச்சி போன்ற அறிகுறிகளை கொண்ட நோய் – மராஸ்மஸ்.
70.வைட்டமின் ஏ குறைவால் மாலைக்கண் நோய் ஏற்படுறது.
71.வைட்டமின் பி1 குறைவதால் ஏற்படும் நோய்- பெரி-பெரி (ஆரோக்கியமற்ற தசை மற்றும் சோர்வு)
72.வைட்டமின் சி குறைவதினால் ஏற்படும் நோய் – ஸ்கர்வி (பல் ஈறுகளில் இரத்தம் வடிதல்)
73.வைட்டமின் டி குறைவினால் ஏற்படும் நோய் – ரிக்கட்ஸ் (வலிமையற்ற, வளைந்த எலும்பு)
74.கால்சியம் குறைவினால் ஏற்படும் நோய் – எலும்பு மற்றும் பல் சிதைவு.
75.அயோடின் குறைவினால் ஏற்படும் உடல்சோர்வு நோய் – முன் கழுத்துக்கழலை.
76.இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் நோய் – இரத்தசோகை.
77.இரும்புச்சத்து அதிகமாவதால் ஏற்படும் நோய் – ஸிடோரிஸ்.
78.உணஊட்டம் என்பது உணவை உட்க்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்கல் எனப் பல நிலைகளை உடையது.
79.தனக்குத்தேவையான உணவை தானே தயாரித்துக்கொள்ளும் முறை – தற்சார்பு உணவூட்ட முறை எனப்படும்.
80.தற்சார்பு உணவூட்ட முறைக்கு உதாரணம் -பசுந்தாவரங்கள், யூக்ளினா.
81.தானே உணவை தயாரிக்க இயலாதலால் உணவுக்காக பிற உயிரினங்களை சார்ந்து வாழ்வது – பிறசார்பு ஊட்ட முறை எனப்படும்.
82.கஸ்க்யூட்டா தாவரம் உணவிற்காக பிற தாவரங்களை சார்ந்து வாழ்கிறது. இது ஒட்டுண்ணி ஊட்ட முறைக்கு ஓர் எ.கா. ஆகும்.
83.பேன், அட்டைப்பூச்சி போன்றவை – புற ஒட்டுண்ணிகள்.
84.அக ஒட்டுண்ணிக்கு உதாரணம் – உருளைப்புழு.
85.சூரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றை பயன்படுத்தி தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்கின்றன.
86.இறந்துபோன தாவர, விலங்கு பொருட்க்களை மக்கச்செய்து, எளிய மூலக்கூறுகளாக மாற்றி, அவற்றை உடல் சுவர் வழியாக உறிஞ்சுவது – சாறுண்ணி உணவூட்டம். எ. கா.: காளான்
87.நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா போன்றவை – பூச்சி உண்ணும் தாவரங்கள் ஆகும்.
88.நெப்பந்தஸ், டிரோசீரா, யூட்ரிகுலேரியா போன்ற தாவரங்கள் நைட்ரஜன் குறைந்த மண்ணில் வளர்வதால் பூச்சிக்களை பிடித்துஉட்கொண்டு அவற்றிலிருந்து நைட்ரஜன் பெறுகிறது.
89.வைட்டமின் B2 உள்ள உணவு பொருள் -பட்டாணி.
90.இருதய நோய் வராமல் தடுக்கும் உணவுப் பொருள்கள் – வேகவைத்த மீன், கத்திரிக்காய்.
91.கத்தரிக்காயில் உள்ள அமிலம் – அஸ்கார்பிக் அமிலம்.
TO Know More about TNUSRB Exam Pls. Visit Official Site
Leave a Reply