TNPSC Daily Current Affairs Update 01 May 2018

Download (PDF, 2.36MB)

 

நாள்: மே – 1

சர்வதேச நிகழ்வுகள்

News Title 01: பிரடேட்டர் ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்

 • பிரடேட்டர் ரக ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
 • நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் கண்காணிப்பது மட்டும் அல்லாமல், இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட பிரடேட்டர் பி ரக ஆளில்லா உளவு விமானங்களை வாங்க மத்திய அரசு ஆர்வம் காட்டியது.
 • இதுதொடர்பாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பிரடேட்டர் ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதை இருநாட்டு தூதரக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

News Title 02: விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லாவுக்கு அதிபர் டிரம்ப் புகழாரம்

 • விண்வெளிக்கு பயணித்த முதல் இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லாவை, அமெரிக்காவின் ஹீரோ என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
 • 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லா உயிரிழந்தார். மே மாதத்தை Asian/Pacific American பாரம்பரிய மாதமாக அமெரிக்க அரசு அங்கீகரித்ததை அடுத்து இதுகுறித்து பேசிய அதிபர் டிரம்ப், விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என நினைக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா ஊக்கமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.
 • விண்வெளி சார்ந்த திட்டங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கல்பனா சாவ்லா, அமெரிக்காவின் ஹீரோ என்றும் டிரம்ப் புகழ்ந்தார்.

தேசிய நிகழ்வுகள்

News Title 01: சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நிறம் மாறும் தாஜ்மஹாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

 • சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகாலின் நிறம் மாறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்த தாஜ்மகால், மாசுபாட்டால் தற்போது பழுப்பு நிறத்துக்கு மாறிவிட்டதாக கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் இந்திய அல்லது வெளிநாட்டு வல்லுனர்களின் ஆலோசனையை அரசு பெற வேண்டுமென்று கூறியுள்ளது.
 • இது தொடர்பான பொதுநலன் மனுவை விசாரித்த நீதிபதிகள் லோகூர் மற்றும் தீபக் குப்தா அமர்வு, நிபுணர்களின் யோசனைப்படி, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, வழக்கை மே 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது

News Title 02: நோக்கு கூலி முறை ரத்து

 • கேராளாவில் நோக்கு கூலி முறையை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
 • நோக்கு கூலி என்பது ஒரு துறையில் அத்துறை சார்ந்த சங்கத்தினரை பணியமர்த்தாமல் வேறு வகையில் வேலை செய்ய வேண்டுமென்றால் அந்த கூலியை தொழிலாலர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.
 • உதாரணமாக ஒரு நிறுவனம் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளும் போது அந்த வேலைக்கு எவ்வளவு மனித உழைப்பு தேவைப்படும் என கணகிட்டு குறிபிட்ட சங்கத்திடம் கூலியை அளிக்க வேண்டும்.
 • சம்பந்தப்பட்ட தொழிலாலர்கள் பணியிடத்துக்கு வந்து வேடிக்கை பார்பார்கள் இப்படி நோக்கவதற்கான் கூலிதான் நோக்கு கூலி

தமிழக நிகழ்வுகள்

News Title 01: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் எடபாடி பழனி சாமி சந்திப்பு

 • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
 • காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மே 3ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 • இதனிடையே கிண்டி ஆளுநர் மாளிகை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு ஆளுநரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

News Title 02: மக்கள் நீதி மய்யத்தின் விசில் ஆப்

 • சென்னை ஆழ்வார் பேட்டையில் மய்யம் விசில் ஆப் –ஐ அறிமுகப்படுத்தி உரையாற்றினார் நடிகர் கமல்.
 • சமூகத்தில் நடக்கும் அவலங்களை படம்பிடித்து மக்கள் அனுப்ப இந்த ஆப் உதவும் என குறிபிட்டார்.

விருதுகள் & சாதாணைகள்

News Title 01: 1000 அடி உயரமுள்ள பாறையின் பிளவில் ஏறி பெண் ஒருவர் புதிய சாதனை

 • இங்கிலாந்தில் 1000 அடி உயர்முள்ள பறை பிளவில் கரோலின் என்ற பெண் முதன்முறையாக ஏறி சாதனை படைத்துல்ளார்.
 • வேல்ஸ் பகுதியில் உள்ள லியான்பெரிஸ் ((Lianberis)) என்ற இடத்தில் உள்ள கைவிடப்பட்ட பிரமாண்டமான குவாரியில் ஆயிரம் அடிக்கு மேல் உள்ள பாறையின் பிளவில் ஏறுவது சாகசப் பிரியர்களுக்கு பிடித்தமான ஒன்று.
 • இந்நிலையில் ஆண்கள் மட்டுமே சாகசம் செய்த இந்த இடத்தில் கரோலின் என்ற பெண்ணும் உயிரைப் பணயம் வைத்து முதன்முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

ராஜினாமாக்கள்

News Title 01: வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பேஸ்புக்கில் இருந்து விலகுகிறார்.

 • உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜான் கோம் வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பதவியிலிருந்து விலகுகிறார்.
 • 2014-ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் 1900 கோடி டாலருக்கு வாட்ஸ் அப் செயலியை கைய்கப்படுத்தியது.
 • ஜான் கோம் வாட்ஸ் ஆப் தலைமை செயல் அதிகாரியாக் செயல்பட்டதுடன் பேஸ்புக் இணைக்குழுவிலும் இணைந்தார்.
 • பேஸ்புக் நிறுவனத்துடனான முரண்பாடு காரணமாக கோம் பதவி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வர்த்தகம் & பொருளாதாரம்

News Title 01: சர்வதேச அளவிலான உப்பு உற்பத்தி

 • உலக அளவில் உப்பு உற்பத்தியில் சீனா, அமெரிக்காவை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
 • இந்தியாவில் ஆண்டுக்கு 230 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மும்பையில் உள்ள உப்பளத்தில் உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடக்கிறது.

தினங்கள்

News Title 01: உலக உழைப்பாளர் தினம் மே-1

 • 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

News Title 01: ஐசிசி டெஸ்ட் தரவரிசை

 • 2016-17 சீசனில் 13 டெஸ்டில் 10 டெஸ்டில் வெற்றி வாகைச் சூடியது.
  இறுதியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என இந்தியா தொடரை இழந்தது என்றாலும் ஐசிசி-யின் கட்ஆஃப் தேதிக்குள் இந்தியா முதல் இடத்தில் நீடித்ததனால் ஐசிசியின் விருதை பெற்றது.
 • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் இறுதியில் ஆண்டு இறுதி அப்டேட்டை வெளியிடும். இதில் இந்தியா 125 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
 • தென்ஆப்பிரிக்கா ஐந்து புள்ளிகள் இழந்து 112 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 13 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.
 • ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 106 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
 • நியூசிலாந்து 4-வது இடத்தையும், இங்கிலாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

News Title 02: பத்மஶ்ரீ விருதுக்கு சுனில் சேத்ரி பெயர் பரிந்துரை

 • பத்மஶ்ரீ விருதுக்கு இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி-யின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அகில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 • இந்திய அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் விளையாடி அதிக கோல் அடித்தவராக உள்ள சேத்ரி 97 போட்டிகளில் 56 கோல்களை அடித்துள்ளார்.
 • கால்பந்துக்கு அவரது சேவையை பாராட்டி நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News Title 03: சர்வதேச துப்பாக்கி சுடுதல் தரவரிசையில் இந்தியா முதலிடம்

 • சர்வதேச துப்பாக்கி சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷஸார் ரிஸ்வி முதலிடம் பிடித்து அசத்தினார்.
 • கொரியாவின் சங்வானில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் ரிஸ்வி 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 1654 புள்ளிகளுடன் அவர் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • மேலும், கடந்த மார்ச் மாதம் மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் ரிஸ்வி உலக சாதனையுடன் தங்கம் வென்றிருந்தார்.
 • இந்த நிலையில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் ரிஸ்வி முதலிடம் பெற்றுள்ளார். மற்ற இந்திய வீரர்களான ரவிக்குமார் 4-வது இடமும், தீபக்குமார் 9-ஆம் இடமும் பிடித்து உள்ளனர்.
 • அதேபோன்று, 50 மீ. ரைபிள் பிரிவில் அகில் ஷரோன் 4-வது இடமும், சஞ்சீவ் ராஜ்புத் 8-வது இடமும் பிடித்தனர்.
 • மகளிர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனு பேக்கர் இதே பிரிவில் 4-ஆம் இடம் பெற்றுள்ளார். மெஹுலி கோஷ் 7-வது இடமும், அபூர்வி சந்தேலா 11-வது இடமும், அஞ்சும் 12-வது இடமும் பிடித்துள்ளனர்.

News Title 04: உலக யூத் குத்து சண்டை போட்டி

 • ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைப்பெறவுள்ள ஏஐபிஏ உலக யூத் குத்து சண்டை போட்டியில் இந்தியா சார்பில் 16 பேர் பங்கேற்கின்றனர்.
 • இந்திய குத்துச்சண்டை சம்மேளனத் தலைவர் அஜய் சிங் கூறுகையில் 10 வீராங்கனைகள் உட்பட 16 வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும், 2024-ஆம் ஆண்டி நடைப்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

News Title 05: இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர்கள் மாற்றம்

 • இந்திய ஆடவர் மகளிர் ஹாக்கி அணிகளின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் ஆடவர் அணிக்கும், ஆடவர் அணி பயிற்சியாளராக இருந்த ஜோயர்ட் மார்ஜின் மகளிர் அணிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

POLICE EXAM GURU
4.7
Based on 12 reviews
powered by Google
Bharathi Raja
Bharathi Raja
15:37 09 Mar 19
How much amount
Thenn Arasu
Thenn Arasu
11:47 18 Jan 19
Good coaching center daily conducting test police coaching super
saraswathi u
saraswathi u
05:29 12 Dec 18
BEST COACHING FOR ALL COMPETITIVE EXAM..........
Muruga Dhoni
Muruga Dhoni
06:19 01 Jan 18
Best Coaching Centre for Police Constable & SI Exam Coaching
Mariappan Mahesh
Mariappan Mahesh
06:16 01 Jan 18
BEST Coaching Centre for Tamilnadu Plice & SI Exam Coaching
Aarthi Illamalli
Aarthi Illamalli
08:15 31 Dec 17
very good coaching for all competitive exams
parama guru
parama guru
07:46 31 Dec 17
Tom Tom
Tom Tom
06:07 31 Dec 17
Best Coaching Center for Police Constable & SI Exam Coaching in Tamilnadu.
Next Reviews

PC Exam 2019 Results Published

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 25.08.2019 அன்று நடத்திய 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. FINAL...
Read More

SI Exam Notification 2019

TNUSRB Has Released Notification to Recruit 969 Sub Inspectors for Tamilnadu Police Service. Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)...
Read More

Police Constable Notification 2019

Police Constable Notification 2019 Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has released Notification for 8,826 Grade II Police Constable,...
Read More

SI & PC EXAM GK 71

The first Asian Games were held in / முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைப்பெற்றது? [A] Manila / மணிலா [B] Tokyo...
Read More

SI & PC EXAM GK 70

Depletion of ozone layer causes _______ / ஓசோன் அடுக்கின் பற்றாக்குறையால் _____ நோய் ஏற்படுகிறது. [A] Blood cancer / ரத்த புற்றுநோய் [B]...
Read More

SI & PC EXAM GK 69

Electron microscope was invented by whom? / எலக்ட்ரான் நுண்ணோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? [A] Knoll and ruska / நொல் மற்றும் ருஸ்கா [B]...
Read More

SI & PC EXAM GK 68

The outer most layer of the sun is called _____ / சூரியனின் வெளியடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது? [A] Chromosphere / நிற மண்டலம்...
Read More

SI & PC EXAM GK 67

The World's longest railway platform is at:/ உலகின் மிகநீளமான ரயில்வே நடைமேடை எங்கு அமைந்துள்ளது? [A] Talchar / தலசர் [B] New york...
Read More

SI & PC EXAM GK 66

When was the Panchayat Raj system introduced in India? / இந்தியாவில் பஞ்சாயத் ராஜ் முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? [A] 1945 [B] 1950...
Read More

SI & PC EXAM GK 65

Which of the following is called “The Bible of Tamil Land”? “தமிழ் மன்னின் பைபிள்” என அழைக்கப்படும் நூல் எது? [A] Tirukural...
Read More