SI & POlice Exam Daily Current Affairs Update PDF

Download (PDF, 2.75MB)

நாள் ஏப்ரல் – 30

உலக நிகழ்வுகள்

News Title 01: தென்கொரியா நேரத்தை பின்பற்ற வட கொரியா முடிவு

  • வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். இதனால் 60 ஆண்டாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலேயே இதற்கான சுவடுகள் தெரிந்தது.
  • இந்த சந்திப்பால் இரண்டு நாடுகளுக்கும் இருந்த பிரச்னை மொத்தமாக முடிவிற்கு வந்துள்ளது. 2015ல் வடகொரியா தென்கொரியாவிற்கு எதிராக களமிறங்கியது. அவர்களிடம் இருந்து முழுவதுமாக வேறுபட ஆசைப்பட்டு, தென் கொரியா பின்பற்றும் நேரத்தை விட 30 நிமிடம் குறைவான நேரத்தை பயன்படுத்தியது.
  • இரு நாட்டு அதிபர்களும் சந்தித்த அறையில் இரண்டு கடிகாரம் இருந்துள்ளது. இந்த இரண்டில் ஒன்றில் வடகொரியா நேரமும், மற்றொன்றில் தென்கொரிய நேரமும் இருந்துள்ளது. இதை பார்த்து இரண்டு தலைவர்களும் வருந்தியுள்ளனர். இதையடுத்து, கிம் ஜாங் வடகொரியா நேரத்தை மீண்டும் அரை மணி நேரம் அதிகமாக்க போவதாக அறிவித்தார்.
  • அதோடு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அரை மணிநேரம் அதிகமாகி உள்ளது. எல்லா மக்களும் அரை மணி நேரத்தை அதிகப்படுத்தி, மீண்டும் தென்கொரியாவோடு ஒன்றிணைந்தனர்.

News Title 02:   இந்தியா – நேபாளம் இடையேயான அரசாங்கக் குழு கூட்டம்

  • இந்தியா-நேபாள உடன்படிக்கை மற்றும் இந்தியா-நேபாள ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் நேபாள ஒப்பந்தம், இரண்டு அரசாங்கங்களின் வர்த்தக செயலாளர்களால் தலைமையிடமாக இருக்கும் வர்த்தக, போக்குவரத்து மற்றும் ஒத்துழைப்பு கட்டுப்பாட்டை ஒத்துழைப்புக்கான இந்தியா நேபாள இடைக் கழகம் (IGC) செயல்படுகிறது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான IGC இன் கூட்டம் ஏப்ரல் 26- 27 ஆகிய தேதிகளில் நேபாளத்தின் காட்மண்டுவில் நடைப்பெற்றது.
  • இம்மாநாட்டில் இந்தியாவின் சார்பில் திருமதி ரிதா தேயோட்டியா பங்கேற்றார்.
  • இரு நாடுகளும் ஜூலை 2018 ல் இருதரப்பு வர்த்தகத்தை நிர்வகித்து, 2009 ல் திருத்தப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையின் விரிவான மறு ஆய்வு செய்யத் தொடங்க ஒப்புக்கொண்டது.

News Title 03: ஹரிமுவ் சக்தி 2018

  • இந்தியா – மலேசியா இருதரப்பு ராணுவக் கூட்டு பயிற்சியான ஹரிமுவ் சக்தி 2018 மலேசியாவின் ஹீலு லாங்கட் மாவட்டத்தில் செங்காய் பெர்டிக் அடந்த காட்டு பகுதியில் ஏப்ரல் 30 முதல் மே 15 வரை நடைப்பெறுகிறது.

News Title 04: வங்காளதேசத்தின் விடுதலை போர் நினைவு சின்னங்களை இந்தியா ஒப்படைத்தது

  • 1971-ஆம் ஆண்டு நடைப்பெற்ற வங்காளதேச விடுதலைப்போர் நினைவுசின்னத்தின் ஒரு பகுதியான மி-4 ரக ஹெலிக்காப்டர் ஒன்று, பி.டி.76 ரக பீரங்கிகள் இரண்டு, ஆகியவற்றை வங்காளதேசத்திடம் இந்தியா ஒப்படைத்துள்ளது.
  • வங்காளதேச ராணுவம், விமானபடை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய நிகழ்வுகள்

News Title 01: இந்தியாவில் பல இடகளில் தீ எரியும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

  • நாசா வெளியிட்டு உள்ள படங்களில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.இந்த தீ புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங்கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டை குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
  • இந்த தீ புள்ளிகள் அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயை குறிப்பதாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
  • நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம்  மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலேயே அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன. தென் மாநிலங்கள் சிலவற்றில் குறைந்த அளவு தீப்புள்ளிகள் காணப்படுகின்றன.
  • கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, ஏற்படும் இந்த காட்டுத்தீயால் வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததாலும், விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகளே விளை நிலத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் அதிகம் நடந்ததாலும் இந்த தீ புள்ளிகள் அதிகமாக காணப்படுவதாலும் இப்படி நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

News Title 02: ICGS C- 438 ரோந்து கப்பல் இந்திய கடலோரக் காவல்படைக்கு அர்பணிப்பு

  • இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்தியத்துக்கு ICGS C- 438 என்ற புதிய ரோந்துப் படகு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • காட்டுபள்ளி L&T கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்த ரோந்துப் படகு 27.80 மீட்டர் நீளமும் 106 டன் எடையும் கொண்டது. மணிக்கு சுமார் 45 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது.

தமிழக நிகழ்வுகள்

News Title 01: தமிழ்நாடு பல்கலைகழக தர மதிப்பு சேவை

  • தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைகழகங்களின் தர மதிப்பு தொடர்பான சேவை அளிப்பதற்காக “ஐகேர்” என்ற தனியர் நிறுவனத்துடன் முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி முன்னிலையில் தலைமை செயலகத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அறிவியல் & தொழில்நுட்பம்

News Title 01: 10 நாட்களில் 2400 புதிய கிரகங்களை கண்டு பிடித்த நாசா

 

  • நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்ற சாட்டிலைட் இதுவரை 2,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் நிறைய கிரகங்கள் இருக்கிறது என்று நாசா இதன் மூலம் கண்டுபிடித்துள்ளது.
  • இதை அனுப்புவதற்காக 337 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. வானத்தில் உள்ள 85 சதவிகித பகுதிகளை இது ஸ்கேன் செய்யும். டெஸ் சாட்டிலைட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது.
  • இதில் சிறிய கேமராக்கள் நான்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. வெவ்வேறு திசைகளில் இந்த கேமரா வைக்கப்பட்டு இருக்கும் . இதன் அளவும் செண்டிமீட்டர் கணக்கில்தான் இருக்கும். இதன் மூலமே இது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது.

News Title 02: வித்தியாசமான வடிவில்

  • ஜெஃப் பிஸோஸ் என்ற அமெரிக்கருக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் என்று தனியார் நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்று ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது.
  • இந்த நியூ ஷேஃபர்ட் 2.0 ராக்கெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், முன்பக்கம், வடிவம் எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.
  • இந்த ராக்கெட் முதல்முறையாக 1 மீட்டருக்கும் லட்சத்திற்கும் அதிகமான தூரம் சென்று சாதனை படைத்து இருக்கிறது. இவ்வளவு தூரம் சென்ற பின்பும் சரியாக மீண்டும் தரையிறங்கி உள்ளது.
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன் அனுப்பிய பல்கான் ஹெவி என்ற ராக்கெட்டிற்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

News Title 01: பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளி நியமனம்

  • பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளியான சஜித் ஜாவித் நியமனம்.

News Title 02: ஜம்மூ காஷ்மிரின் புதிய துனைமுதல்வர் நியமனம்

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணை முதல்வர் டாக்டர் நிர்மல் சிங் பதவிக்கு பதிலாக கவிந்தர் குப்தாவை நியமிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
  • முன்னதாக கவிந்தர் குப்தா ஜம்மூ – காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை சபாநயகராக பணியாற்றினார்.

விளையாட்டு

News Title 01: முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்

  • அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடரான என்எஃப்எல்லில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஒற்றை கை வீரர் என்ற பெருமையை ஷாகேம் கிரிஃபா பெற்றுள்ளார்.
  • முதலில் கல்லூரி அளவிலான போட்டிகளில் விளையாட ஆரம்பித்த கிரிஃபா, கடந்த 2016ஆம் ஆண்டு சிறந்த தடுப்பாட்டக்காரர் விருதை வென்றார். மேலும், தோற்கடிக்கப்பட முடியாத அணியாக கருதப்படும் யூனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடாவுக்காகவும் அவர் விளையாடினார்.
  • 2003-ஆம் ஆண்டிற்கு பிறகு 40 அடி தூரத்தை மிக வேகமாக கடந்த முதல் தடுப்பாட்டகாரர் என்ற பெயரையும் பெற்றார்.

News Title 02: காமன்வெல்த் போட்டி வீரர்களுக்கு பாராட்டி விழா

  • கானம்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார்.
  • கோல்ட்கோஸ்ட் நகரில் நடைப்பெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டு போடிகளின் பதக்க பட்டியில் இந்திய 3-வது இடத்தை பெற்றது.
  • இதற்கிடையே பதக்கம் வென்றவர்கள், பல்வேறு சம்மேளனங்களின் நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு பாராட்டு விழா பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைப்பெற்றது.

News Title 03: அர்ஜூனா விருதுக்கு வீராங்கனை சிக்கிரெட்டி பரிந்துரை

  • அர்ஜூனா விருதுக்கு பாட்மிண்டன் வீராங்கனை சிக்கிரெட்டியின் பெயரை இந்திய பாட்மிண்டன் சம்மேளம் பரிந்துரைத்துள்ளது.
  • அர்ஜூனா விருதுக்கு சிக்கிரெட்டி பெயரும், பயிற்சியாளர் சுதாகர் ரெட்டிக்கு துரோணாச்சாரிய விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

News Title 04: சர்வதேச டென்னிஸ் தர வரிசை பட்டியல்

  • சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84 இடங்கள் முன்னேறி தற்போது 176-வது இடத்தில் உள்ளார்.
  • சீனாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் சர்க்யூட் போட்டியில் வென்றதன் மூலம் அவருக்கு 125 புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலில் 200 இடங்களுக்கு நுழைந்துள்ளார்.
  • முன்னனி வீரரான யுகி பாம்ப்ரி 85-வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 12-வது இடத்திலும் உள்ளனர்.

News Title 05: பெடரேஷன் கோப்பை கூடைபந்து போட்டி

  • 32-வது பெடரேஷன் கோப்பை கூடைபந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட விளையாட்டு கவுன்சில் மைதானத்தில் மே 1 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாடு முழுவதும் சிறந்து விளங்கும் முதல் 9 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

News Title 06: ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டி

  • லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் ஸ்பெயின் லா லிகா கால்பந்து சாம்பியன் பட்டத்தை பார்சிலோனா அணி தட்டி சென்றது.
  • இந்த வெற்றியின் மூலம் இதுவரை இந்த சீசனில் தோல்வியை தழுவாத அணியாக திகழ்கிறது.
  • பார்சிலோனா அணியின் கேப்டன் இந்த சீசனோடு தனது 22 ஆண்டுக் கால தொடர்பை முடித்து கொண்டு விடை பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

POLICE EXAM GURU
4.7
Based on 12 reviews
powered by Google
Bharathi Raja
Bharathi Raja
15:37 09 Mar 19
How much amount
Thenn Arasu
Thenn Arasu
11:47 18 Jan 19
Good coaching center daily conducting test police coaching super
saraswathi u
saraswathi u
05:29 12 Dec 18
BEST COACHING FOR ALL COMPETITIVE EXAM..........
Muruga Dhoni
Muruga Dhoni
06:19 01 Jan 18
Best Coaching Centre for Police Constable & SI Exam Coaching
Mariappan Mahesh
Mariappan Mahesh
06:16 01 Jan 18
BEST Coaching Centre for Tamilnadu Plice & SI Exam Coaching
Aarthi Illamalli
Aarthi Illamalli
08:15 31 Dec 17
very good coaching for all competitive exams
parama guru
parama guru
07:46 31 Dec 17
Tom Tom
Tom Tom
06:07 31 Dec 17
Best Coaching Center for Police Constable & SI Exam Coaching in Tamilnadu.
Next Reviews

PC Exam 2019 Results Published

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 25.08.2019 அன்று நடத்திய 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. FINAL...
Read More

SI Exam Notification 2019

TNUSRB Has Released Notification to Recruit 969 Sub Inspectors for Tamilnadu Police Service. Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)...
Read More

Police Constable Notification 2019

Police Constable Notification 2019 Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has released Notification for 8,826 Grade II Police Constable,...
Read More

SI & PC EXAM GK 71

The first Asian Games were held in / முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைப்பெற்றது? [A] Manila / மணிலா [B] Tokyo...
Read More

SI & PC EXAM GK 70

Depletion of ozone layer causes _______ / ஓசோன் அடுக்கின் பற்றாக்குறையால் _____ நோய் ஏற்படுகிறது. [A] Blood cancer / ரத்த புற்றுநோய் [B]...
Read More

SI & PC EXAM GK 69

Electron microscope was invented by whom? / எலக்ட்ரான் நுண்ணோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? [A] Knoll and ruska / நொல் மற்றும் ருஸ்கா [B]...
Read More

SI & PC EXAM GK 68

The outer most layer of the sun is called _____ / சூரியனின் வெளியடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது? [A] Chromosphere / நிற மண்டலம்...
Read More

SI & PC EXAM GK 67

The World's longest railway platform is at:/ உலகின் மிகநீளமான ரயில்வே நடைமேடை எங்கு அமைந்துள்ளது? [A] Talchar / தலசர் [B] New york...
Read More

SI & PC EXAM GK 66

When was the Panchayat Raj system introduced in India? / இந்தியாவில் பஞ்சாயத் ராஜ் முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? [A] 1945 [B] 1950...
Read More

SI & PC EXAM GK 65

Which of the following is called “The Bible of Tamil Land”? “தமிழ் மன்னின் பைபிள்” என அழைக்கப்படும் நூல் எது? [A] Tirukural...
Read More